[புதன்கிழமை, 11 மார்ச் 2009,] ஐரோப்பா வாழ் தமிழ் மக்களால் பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் அமைந்துள்ள ஜரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக "உரிமைப் போர்" பேரணியும் பொதுக்கூட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐரோப்பா வாழ் தமிழ் இளையோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (16.03.09) முற்பகல் 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழீழ மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தன்னாட்சி உரிமையையும், தமிழீழ மக்களின் அரசியல் தலைமையான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அங்கீகரிக்கக் கோரியும், பௌத்த சிங்கள பேரினவாத்தின் தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக் கோரியும் இப்போராட்டம் மூலம் வலியுறுத்தப்படவுள்ளது. அத்தோடு, வன்னியில் போர் முற்றுகைக்குள் அல்லற்படும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன. இதே நாள் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் சுவிஸ் வாழ் மக்களால் "சாவிலும் எழுவோம்" பேரணி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Wednesday, March 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.