Wednesday, February 11, 2009

பிபிசி செய்தி சேவை நிறுத்தப்பட்டதனால் மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம்: சிறிலங்கா அமைச்சர்

[புதன்கிழமை, 11 பெப்ரவரி 2009] இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற போது, தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன அங்கு விளக்கமளித்தார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிபிசி சிங்கள சேவையின் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கூறியபோதே லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார். பிபிசி செய்தி சேவையின் வருமானத்தின் மூலமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரியும் பணியாளர்கள் பலருக்கு சம்பளம் வழங்கியதாகவும் தற்போது பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.