Sunday, February 15, 2009

"வீரத் தமிழ் மகன்" முத்துகுமாருக்கு சென்னையில் வீரவணக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] ஈழத் தமிழர் விடுதலைக்காக தீக்குளித்து இன்னுயிர் ஈந்த "வீரத் தமிழ் மகன்" முத்துகுமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க பேரணி பொதுக்கூட்டத்தினை சென்னையில் நடத்த தமிழீழ ஆதரவு மாணவர் பேரியக்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்வரும் புதன்கிழமை (18.02.09) பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் திரண்டு மன்றோ சிலை முதல் சேப்பாக்கம் வரை வீரவணக்கப் பேரணியினை நடத்த திட்டமிட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள் என தெரித்தனர். பேரணியின் முடிவில் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் உரையாற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.