[திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2009] வன்னி மக்களின் அவலங்களை வத்திக்கான் பரிசுத்த பாப்பரசருக்கு மிகவில் சென்று எடுத்துரைப்பேன் என இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் அதி.வண.மரியா செனாரி ஆண்டகை தெரிவித்துள்ளார். விரைவில் நான் வத்திக்கான் சென்று பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் போது வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தெளிவாக எடுத்துக்கூறுவேன். நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கான வத்திக்கான் தூதுவராக பணியாற்றி சிரியாவுக்கு இடமாற்றமாகிச் செல்லும் அவருக்கு யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் சேர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். பிரிவுபசார நிகழ்வு நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தள்ளார். வன்னியில் வாழுகின்ற மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு ஏற்ற நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும். இதற்காக அனைவரும் மேற்கொள்கின்ற பிரார்த்தனைகள் வரவேற்கத்தக்கது. வன்னி மக்களுக்காவும் அவர்களின் நிம்மதிக்காகவும் சுபீட்சத்துக்காகவும் அனைத்து மக்களும் மேற்கொண்டுவரும் பிரார்த்தனைகள் தொடர்பாகவும் பாப்பரசரிடம் எடுத்துக் கூறுவேன் என்றார். இத்திருப்பலியில் பெரும் திரளானவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, February 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.