[புதன்கிழமை, 25 பெப்ரவரி 2009] வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தானே அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் காலை 10:00 மணிவரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். உ.மகேஸ்வரி (வயது 45) யோ.வனிதா (வயது 21) ச.தர்மலிங்கம் (வயது 68) இ.வாகினி (வயது 26) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை. யோ.இந்திராணி (வயது 41) த.யோகராசா (வயது 41) இ.ரவீந்திரகுமார் (வயது 39) வ.ராதிகா (வயது 40) உ.அனுராஜ் (வயது 18) த.சரஸ்வதி (வயது 57) இ.வரன் (வயது 11) இ.நளினி (வயது 16) பா.டினேஸ் (வயது 14) க.அமிர்தலிங்கம் (வயது 52) பொ.புண்ணியமூர்த்தி (வயது 38) க.யேந்தபத்மினி(வயது 54) க.ஆனந்தன் (வயது 34) ஆ.யுவனேஸ் நிரோசன் (வயது 26) சி.புலேந்திரன் (வயது 21) சு.புஸ்பானந்தன் (வயது 33) ஆ.குகனேசன் (வயது 27) பாலேந்திரன் (வயது 26) புவனேஸ்வரி (வயது 21) ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.