மக்களின் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக இந்த மக்களுக்காகவே தம்மை ஆகுதியாக்குபவர்களாக கரும்புலிகள் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார்.
இளந்தென்றல் நிறுவனத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வில் நினைவுரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழினத்தின் விடுதலைக்காக தம்மையே துறந்து தமது உயிர்களையே ஆயுதங்களாக்கி வரலானவர்கள் கரும்புலிகள்.
விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான திருப்புமுனைத் தாக்குதல்கள் கரும்புலிகளினால் நிகழ்த்தப்பட்டு வரலாற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கரும்புலிகள் தமது மக்கள் மீது அதீத பற்றுக்கொண்டவர்கள். இந்த மக்கள் எதிரியால் கொடுமையாக வதைக்கப்படும்போது அவர்களின் அந்தப்பற்று வெளிப்படும்.
இந்த மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாக மகிழ்வாக உரிமைகளுடன் வாழவேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்து வரலாறானவர்கள் என்றார் அவர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.