தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதலாவது கட்டளைத் தளபதி ஆவார். 1993 ஆம் ஆண்டு வரையும் 1995-1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் அவர் அப்பொறுப்பை வகித்தார்.
தமிழர்களின் போரியல் திறமையை உலகுக்கு அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றியவர்.
அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிரிகேடியர் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்று விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

களம் பல கண்டு விழிகளை மட்டும் மூடியிருக்கும் எங்கள் தளபதி பால்ராஜ் அண்ணாவிற்கு என்னுடைய கண்ணீரஞ்சலிகள்
ReplyDeleteமுரளி.
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
ReplyDeleteஉன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
ஆனையிறவின் நாயகனே
வன்னிவிக்கிரமவில் புயலவனே..!
தீரத்தின் விளைநிலமே
வன்னியின் செல்வ மைந்தனே..!
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
தமிழர் சேனைத் தலைவனின்
வீரத் தளபதியே
தலைவன் செய்திகள் சேருமுன்
சாதிக்கத் துடித்தவனே..!
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
கூவி வந்த யாழ்தேவி
புரட்டி விட்டவனே
திமிரெடுத்து வந்த சிங்களத்தின்
கதை முடித்தவனே..!
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
சாதனைகள் உன்
சட்டைப் பை ரகசியங்கள்.
சோதனைகள் உன்முன்
பட்டன வேதனைகள்.
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
ஈழக்கனவில் நாம்
நித்தம் அழுகிறோம்..
நீயும் ஏன் அண்ணா
மரணத்தை அணைத்தெம்மை
அழ வைத்தாய்..!
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
விடிவதற்குள் ஏனிந்த அவசரம்
விடிந்த பின்னும்
நிச்சயம்
தமிழரெம் இதயமெங்கும்
உன் பெயர் ஒலிக்கும்..!
நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.
நெடுக்ஸ்
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.
ReplyDeleteபால்ராஜ் அண்ணாவின் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்திற்கு உதறலெடுக்கும். ஈழத் தமிழர்களுக்கு இது பேரிழப்பாகும்.
kumar
வீர வணக்கம்.
ReplyDeleteஇக்காலகட்டத்தில் எமது மக்களில் யாரை இழந்தாலும் அது வேதனைக்குரியதே. ஆனால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இழப்பு ஒரு பேரிழப்பு.
Selvamuthu
ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் பெருவீரனாக வாழ்ந்து வீரத்தடம் பதித்தவர் மதிப்புக்குரிய பால்ராஜ் அண்ணா. அவரின் இழப்பின் துயரத்துடன் எமது வீரவணக்கம்..
ReplyDeleteசுழியன்
ஈடு செய்ய முடியாத இளப்பு... அனுபவம் வாய்ந்த தளபதி... மணலாறு மாவட்டம் தந்த இணையில்லா போராளி...
ReplyDeleteசிங்கள குடியேற்றத்தால் ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டு அதன் கொடுமை உணர்ந்து போராளியானவர்... இலங்கை படைகளுக்கு மட்டும் அல்ல இந்திய இராணுவத்துக்கும் பேரிடியாக இருந்தவர்...!
அஞ்சலிகள்..!!
தயா