[திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2008,]
மடு தேவாலயம் மீது சிங்களப் படைகள் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நோர்வே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நோர்வே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை (07.04.08) நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு பா.நடேசன் அனுப்பிய கடிதத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:
இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலம் ஒன்றைச் சிதைத்து அழிப்பதில் சிங்கள அரசு காட்டும் தீவிரம் பற்றிய ஒரு கருத்தினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி இக்கடிதத்தினை எழுதுகின்றேன்.
கடந்த ஒரு வருட காலமாக வன்னியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஒரு பெரும் போரைச் சிங்கள அரசு எம்மீது தொடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
வன்னியின் மேற்குப் பகுதியான மன்னார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க மடுத் தேவாலயப் பகுதியைக் குறியிலக்காகக் கொண்டு சிங்களப் படைகள் இராணுவ நடவடிக்கையினைச் செய்து வருவதை உலகமே அறியும்.
மடுத் தேவாலயம் நூற்றாண்டு காலப் பழமை வாய்ந்த ஒரு திருத்தலம். மத வேறுபாடில்லாமல் தமிழ் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் புனிதத் தலமாக மடுத் தேவாலயம் இருந்து வருகிறது.
அதனாலேயே போரால் இடம்பெயர்ந்த மக்கள் மத வேறுபாடு இல்லாமல் தஞ்சமடையும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் மடுத் தேவாலய வளாகம் இருந்து வந்தது.
மத நல்லிணக்கத்தினதும் - மக்களின் சகிப்புத் தன்மையினதும் சின்னமாகத் தமிழர் நிலத்தில் இருந்துவரும் இந்தப் புனித ஆலயத்தினைச் சிதைத்து அழிக்கும் வெறித்தனத்துடன் கடந்த சில வாரங்களாக இதன் மீது சிங்களப் படைகள் குண்டுமழை பொழிகின்றன.
ஒரு புனித ஆலய வளாகம் இராணுவ இலக்காகச் சிங்களப் படைத் தலைமையினால் இனங்காட்டப்பட்டு அதனை நோக்கிப் படை நகர்வும் குண்டுத் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. எனினும் உலக நாடுகள் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராதிருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பல்குழல் பீரங்கிகள் கொண்டும், ஆட்லறிகள் மோட்டார்கள் கொண்டும் டாங்கிகள் மூலமாகவும் சிங்களப் படைகள் புனித வளாகப் பகுதி மீது தாக்குதலை நடத்துகின்றன.
கண்மூடித்தனமாக நடாத்தப்படும் இக் குண்டுத்தாக்குதல்களால் அங்கு தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஆலய மதகுருமார்களும் புகழ்மிக்க மடு மாதா சிலையுடன் இடம்பெயரவேண்டிய வரலாற்றுத் துயரம் நடந்தேறியுள்ளது.
புனித ஆலயத்தின் ஒருபகுதி சிங்களப் படைகளின் குண்டுத் தாக்குதல்களால் சிதைந்து விட்டது. சிங்களப் படைகளின் குண்டுத் தாக்குதல்கள் தொடர்வதால் ஆலய வளாகம் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சமாதானத் தூதுவரான உங்கள் ஊடாக நோர்வே அரசுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.
மடு புனித ஆலயப் பகுதி மீது சிங்களப் படைகள் நடாத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நோர்வே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக நாடுகளுடனும் வரலாற்றுப் புனித வழிபாட்டுத்தலங்களை பேணிப் பாதுகாக்கும் அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து ஆலயம் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை நோர்வே அரசு எடுக்கவேண்டும் என எமது இயக்கம் எதிர்பார்க்கிறது.
பௌத்த சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் பாதுகாப்பதிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவற்றை நிறுவுவதிலும் பெரும் முயற்சி எடுக்கும் சிறிலங்கா அரசு, ஏனைய மதங்களின் மதச் சின்னங்களைச் சிதைக்கவும், அந்த மதத்தைத் தழுவியுள்ள மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் பௌத்த அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும் தீவிரம் காட்டி நிற்கின்றது.
எமது இயக்கத்தினைப் பொறுத்த வரையில் நோர்வே அரசு வகிக்கும் அனுசரணைப் பாத்திரத்தினை இன்னமும் நாங்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கின்றோம். இத்தகைய கோரிக்கையினை நோர்வே அரசிடம் விடுப்பதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது என்றும் நம்புகின்றோம்.
எனவே ஈழத்தமிழரின் புனிதத் தலமான மடுத்தேவாலயம் மீது சிங்களப் படைகள் தொடுத்துள்ள தாக்குதலை உடனடியாக நிறுத்த, உலக நாடுகளின் துணையுடன் நோர்வே அரசு தேவையான முயற்சிகள் எடுக்கத் தூண்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.