[திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2008,]
நேற்று காலை மரதன் ஓட்டப்பந்தய தொடக்க விழாவை ஆரம்பிக்க கொடியசைத்த வேளை ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் வாழ்வுக்கும் கொடியசைக்கபட்டு விட்டது. இவரின் மரணம் யாருமே எதிர் பார்த்திராத ஒன்று. ஆனால் கொழும்பில் இவருக்கு அரசியல் எதிரிகள் அதிகம். குறிப்பாக தனிப்பட்ட எதிரிகள் மிகவும் அதிகம்.
1983ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு உறுப்பினராக இருந்த திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை 1989இலேயே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இவர் பாராளுமன்றத்திற்கு வர இவர் கொடுத்த/எடுத்த பலி நிக்கலஸ்பிள்ளை என்ற ஒரு சக தமிழரை.
நிக்கலஸ்பிள்ளை நீர்கொழும்பு பகுதியில் உள்ள வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர். திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையும் அதே பகுதியை சேரந்தவர். இருவரும் கொச்சிக்கடை லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள். ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை ஒரு சட்டத்தரணி. நீர் கொழும்பில் உள்ள கள்வர்கள், காடையர்கள், கொலைகாரர்கள் போன்றவர்களை பிணையில் எடுப்பது, அவர்களுக்காக வாதாடுவது போன்ற பல விடயங்களில் மிகவும் பிரபலமான ஒரு சட்டத்தரணி. இவர் தனது வாத திறைமையால் பல கொலைகாரர்களை வெளியில் கொண்டு வந்தவர். இவர்கள் அனைவரும் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் பலமான ஆதரவாளர்களாக மாறினர். இவர்களின் துணையுடன் நீரகொழும்பு பகுதியல் தனது அரசியல் வாழ்வை 1983இல் தொடங்கினார். இவருக்கு ஊரில் செல்வாக்கு என்பதை விட, பயமே அதிகமாக இருந்தது. இவருடன் எவராவது மோதினால் நம்பிக்கையான ஆட்களை வைத்து தட்டி வைத்து விடுவார் என்ற பயமே இந்தப் பகுதி மக்களுக்கு அதிகமாக இருந்தது.
இதேவேளை நிக்கலஸ்பிள்ளை இவருக்கு எதிர்மாறானவர். அவர் மிகவும் தாராள மனம் கொண்ட ஒருவர். மக்களுக்க உதவுவது அவரின் பணியாக கருதி அந்த ஊர் மக்ககளுக்கு சேவை செய்து வந்தவர். 1989ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்ததுதம் திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை எப்படியாவது இந்த முறை தேர்தலில் வெல்ல வேண்டும் என சபதம் எடுத்தார். கம்பகா பகுதியல் தனது ஆதரவாளர்களை வைத்து தேர்தல் மக்கள் கணிப்பை நடாத்திபோதுதான் பெர்னாண்டோபிள்ளைக்கு தன் ஊரில் தனக்கு இருக்கும் செல்வாக்கு தெரிய வந்தது. தன்னை விட பலமடங்கு செல்வாக்கான நிக்கலஸ்பிள்ளையை தன்னால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தார். தனக்கு வேறு பிரதேசத்தில் தேர்தல் சீட்டு தரும்படி கட்சி மேலிடத்தை கோரினார். ஆனால் கம்பகாவை விட வேறு பகுதியை ஒதுக்க கட்சி மறுத்து விட்டது.
கம்பகா மாவட்டத்தில் தான் வெல்ல வேண்டும் என்றால் நிக்கலஸ்பிள்ளை உயிருடன் இருக்க கூடாது என முடிவு செய்தார் பெர்ணான்டோபிள்ளை. லயன்ஸ் கிளப்பில் ஓர் இராப்போசனத்தில் நிக்கலஸ்பிள்ளையின் நடமாட்டங்களை மிகவும் சூசகமாக கேட்டு அறிந்தார். நீர்கொழும்பின் பிரபல ரவுடி ஒருவருக்கு தனது சகா மூலம் பணம் கொடுத்து நிக்கலஸ்பிள்ளையை போட்டுத்தள்ள உத்தரவிட்டார். இலட்சங்கள் கைமாறியதும் நிகலஸ்பிள்ளையும் போட்டுத்தள்ளப்படார்.
நிக்கலஸ்பிள்ளையின் மரண வீட்டுக்க மாலையுடன் சென்ற திரு ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை அவரின் மரண ஆசிர்வாதத்துடன் 1989இல் பாராளுமன்ற உறுப்பினரானார்.
குண்டுத்தாக்குதல் வீடியோ பதிவை உற்றுப்பார்தால் அது அவரின் வலது பக்கமாக வெடிக்கிறது. மரதன் ஓடத் தயாரானவர்கள் இடது புறம் நிற்கிறார்கள். அனைவரும் மிகவும் இறுக்கமான மெல்லிய உடையே அணிந்துள்ளனர். வெடித்த குண்டு கிட்டத்தட்ட பல சதுர மீற்றருக்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 14பேர் கொல்லப்பட்டும் 90பேர் காயமடைந்தும் உள்ளனர். அப்படி ஒரு மரதன் ஓட்ட வீரர்தான் தற்கொலை குண்டுத்தக்குதலை நடத்தியவர் எனில், அவ்வீரர் தான் அணிந்திருந்த மெல்லிய அங்கியினுள், எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வெடிபொருளை மறைத்து வைக்கலாம்? அக்குண்டு இவ்வளவு சேதத்தை ஏற்படுத்த முடியுமா?
ஒரு பார்சல் குண்டை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் இருந்த சுடலையில் இருந்து வீசியதை கண்ட சாட்சியங்கள் நிறைய உள்ளன. ஆனால் அதைப்பற்றி பொலீசார் அக்கறை காட்டவில்லை. தற்கொலை தாக்குதல் என்ற தலையங்கங்களுடன் உலகெங்கும் செய்தி வந்தாகி விட்டது.
சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் மடுத்தேவாலயம் மீதான தாக்குதல்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விடும்.
புலிகளின் பயங்கரவாத தற்கொலை தாக்குதலாக சித்தரிக்கப்பட்ட இச்சம்பவமே, இனி சிறிது காலம் செய்திகளின் சாரமாக இருக்கும்!
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.