[திங்கட்கிழமை, 17 மார்ச் 2008]
தமிழீழ விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கைகளை தானே முழுமையாக நெறிப்படுத்தி வருவதான செய்தியை விடுதலைப் புலிகளின் தலைவரின் பிரசன்னம் உலகிற்கு எடுத்தியம்பியுள்ளது. அதன் தாக்கம் போர்க்களத்திலும் வெளி உலகிலும் எதிரொலிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
முகமாலைக்கு தெற்குப்புறமாக கடந்த வாரம் படையினர் டாங்கிகளின் உதவியுடன் முன்நகர்ந்தனர். விடுதலைப் புலிகளின் முன்னரங்கிற்கு அண்மையாகச் சென்ற படையினர் அந்தப்பகுதியில் மூன்று மணிநேரம் தரித்து நின்ற போதும் மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
களநிலமைகளை இராணுவம் பரீட்சித்து பார்க்கின்றதா என்பது ஒருபுறம் இருக்க விடுதலைப் புலிகள், படையினர் மேலும் குறிப்பிட்ட அளவு தூரம் முன்நகர அனுமதிக்கும் பொருட்டு காத்திருந்தனரா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இந்தச் சந்தேகம் வலுவடைந்ததைத் தொடர்ந்து படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்று விட்டனர்.
முகமாலையின் முன்னரங்கு கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலும் நீண்டுள்ளது. அங்கு இருதரப்பும் போருக்குத் தயாராகி வருகின்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் பகுதியில் இராணுவத்தின் 7 பற்றாலியன் துருப்புக்கள் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன. எனினும் அது கைகூடவில்லை.
தற்போது வன்னியில் மன்னார் மற்றும் மணலாற்றுக் களமுனைகளே உக்கிர மோதல்கள் நடைபெறும் பகுதிகளாக உள்ளன. இங்கு இருதரப்பும் கடுமையான எறிகணை வீச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. மடு தேவாலயத்தில் இருந்து இரண்டரை கி.மீ தொலைவில் தாம் நிற்பதாகவும், அதனைக் கைப்பற்றுவது கடுமையான எதிர்ப்புக்களால் தாமதமாகி வருவதாகவும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான வதந்திகள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. பல புலனாய்வு அமைப்புக்கள் அதனை வெளியிட்டு வந்தன. அதாவது, அவர் கடும் சுகவீனமுற்று இருப்பதாகவும், வான் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும், அவரின் கால் அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. ஆனால் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வேலுப்பிள்ளை பிரபாகரனை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லுமாறு வன்னிக்கு அனுமதியின்றி பயணம் செய்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாகவும் ஒரு புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வாறாயின் தற்போதைய படை நடவடிக்கையை விடுதலைப் புலிகளின் சார்பில் வழிநடத்துவது யார் என்ற கேள்வி வலுவாக எழுந்திருந்தது.
ஆனால் வன்னிக்கு சென்றுவரும் ஐ.நா. மற்றும் அனைத்துலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கூறிய தகவல்கள் வேறுபட்டன. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் அவரின் முழுக்கட்டுப்பாட்டில் தான் அங்கு நடவடிக்கைகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறிலங்காவின் தென்பகுதியில் இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மைகளை கடந்த ஞயிற்றுக்கிழமை (09.03.08) அதிகாலை 12:30 மணியளவில் வெளிவந்த புகைப்படங்கள் கேள்விக்குறியாக்கி விட்டன. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் வணக்க நிகழ்வில் வேலுப்பிள்ளை பிரபாகரன் பங்குபற்றிய காட்சிகள் ஒளிப்படங்களாக வெளிவந்திருந்தன.
15 நிமிடங்கள் அங்கு நின்ற வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர் தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டார். இந்த நிகழ்வில் 13 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.
இந்த 13 உறுப்பினர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (07.03.08) காலை வன்னிக்குச் சென்றிருந்தனர். ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பாதுகாப்பு காவல்துறையினரை விட்டுச்சென்ற அவர்களுக்கான பாதுகாப்பை அதற்கு அப்பால் விடுதலைப் புலிகள் வழங்கினர். அங்கு அவர்களை அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் வரவேற்றதுடன், இரணைமடுக்குளத்திற்கு அண்மையாக உள்ள வதிவிட விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சனிக்கிழமை காலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிவநேசனின் புகழுடல் மாலை 5:30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கலாச்சார மண்டபத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இரவு 8:30 மணியளவில் அது அங்கிருந்து அகற்றப்பட்டது. அதே சமயம் சிவநேசனின் குடும்பத்தவரும், 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வாகனங்கள் மூலம் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு மணிநேர பயணத்தின் பின்னர் இரவு 10:30 மணியளவில் அவர்கள் ஒரு கட்டடத்திற்குள் இறக்கப்பட்டனர். அப்போது பெரும் வாகன ஓசை கேட்டது. அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அணிவகுந்து வந்தனர். அவர்களில் முதலாவதாக புலனாய்வுதுறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு அடுத்தாக அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், பின்னர் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வந்தார்.
இந்தச் சமயத்தில் பிரபாகரனின் காலை தான் அவதானித்தாக ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஆனால் அவர் சாதாரணமாகவே நடந்து வந்ததாக அவர் தெரிவித்தார். சிவநேசனின் புகழுடலுக்கு விளக்கேற்றி மாலை அணிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் சிரம் தாழ்த்தி இறுதி வணக்கம் செலுத்திய பின்னர் சிவநேசனின் மனைவியுடன் பேசினார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினார். மறுநாள் காலை நடேசனை சந்தித்து கலந்துரையாடும் படி அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.
அதன் பின்னர் அவரின் கவனம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் இமாமின் மீது திரும்பியது. அவருடன் பேசிய விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துமாறு தெரிவித்திருந்தார். ஈழவேந்தனின் இடத்திற்கு இமாம் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மோதல்கள் தொடர்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் மிக முக்கிய கருத்துக்களைக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். அதாவது வன்னியில் நடைபெறும் மோதல்களை எதிர்கொள்வது எனது பொறுப்பு, அது தொடர்பாக நான் கவலைப்படவில்லை. ஆனால் வன்னி மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை வெளி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது உங்களின் கடமை என்று வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு 15 நிமிடங்கள் நீடித்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசனுக்கான இறுதி வணக்கத்தினை பதுங்குகுழி ஒன்றிற்குள் நிகழ்த்தியதாக படையினரின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்த போதும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை மறுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கைகளை தானே முழுமையாக நெறிப்படுத்தி வருவதான செய்தியை விடுதலைப் புலிகளின் தலைவரின் பிரசன்னம் உலகிற்கு எடுத்தியம்பியுள்ளது. அதன் தாக்கம் போர்க் களத்திலும் வெளியுலகிலும் எதிரொலிக்கலாம். வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளில் அதன் தாக்கம் வெளித்தெரியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.