[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல்களை நடத்துவதற்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் 18,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: கொழும்பில் வீடு, வீடாக சோதனைகள் நடத்தப்பட உள்ளன, இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் உடனடியாக பூசா தடுப்பு முகாமிற்கு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்படுவார்கள். மேல்மாகாணத்தில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரும் தேடுதல் வேட்டைகள் இன்று ஆரம்பமாக உள்ளன. இதில் 18,000 படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலதிக தாக்குதலை தடுக்கும் பொருட்டும் பெரும் தொகைப் படையினர் மேற்கு மாகாணத்தில் நிறுத்தப்பட உள்ளனர். நேற்று உயர் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச இந்த சிறப்பு நடவடிக்கைக்கான உத்தரவுகளை வழங்கியிருந்தார். இந்த நடவடிக்கை மேல்மாகாணத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளது. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் என 18,000 படையினரை ஒருங்கிணைத்து பெர்னாண்டோ கொழும்பை பாதுகாக்கும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, December 02, 2007
கொழும்பைப் பாதுகாக்க 18,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sunday, December 02, 2007
1 comment
Subscribe to:
Post Comments (Atom)
வடகிழக்குப் பகுதியிலிருந்துதானே இவ்வளவு இராணுவத்தினரையும் கொண்டு வரவேண்டும். பிறகு எப்படி கிளிநொச்சியின் அருகில் இராணுவத்தினர் நிலைகொள்வார்கள். மண்டையைப்போட்டுக் குழப்பினாலும் எங்கோ உதைக்கிறது.
ReplyDelete--------------------
இறைவன்