[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்துடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்று ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் மற்றும் 5 தளபதிகள் மறைவு கேட்டு 8 கோடி தமிழனின் இரத்தம் உறைந்து போய் கிடக்கிறது. தூதுவனாக இருந்து அமைதிப் பேச்சுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட போராளிகளை இன்று கொன்று குவித்து விட்டார்களே. மனிதாபிமானமற்ற முறையில் தொடரும் இந்த செயலை உலக நாடுகள் இன்னும் எத்தனை நாளுக்கு பார்த்துக் கொண்டிருக்க போகின்றன. இதற்கு மேலும், இந்திய அரசு மவுனம் காட்டாமல் இலங்கையுடன் இருக்கிற எல்லா உறவுகளையும் உடனடியாக விலக்கிக் கொண்டு, ஐ.நா.வில் இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
Sunday, November 04, 2007
சிறிலங்காவுடனான உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும்: ஜெகத்ரட்சகன்
Sunday, November 04, 2007
1 comment
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ் நாட்டு முன்னனி அரசியல் தலைவர்கள் யாரும் சரியில்லாததே இதற்கு காரணம், மத்தியில் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்கிற நிலை இருந்தும் கூட ஏன் இவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதே வேறு ஒரு மொழி இனத்தவருக்கு இந்த நிலை என்றால் முதலில் நிற்கும் மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது
ReplyDelete