[செவ்வாய்க்கிழமை, 2 ஒக்ரொபர் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளதாவது:
புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காகவும் அதற்கான பொதுத் தேர்தலை நடத்துவதற்காகவும் தம்முடன் கூட்டாக இணைந்து செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சி எமக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பைக் கூட்டமைப்பால் உடனே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஐ.தே.க. தனது நிலைப்பாட்டை அண்மைக்காலமாகத் திடீரென மாற்றி வருகின்றது.
இலங்கையில் பயங்கரவாதம் இருப்பதாகவும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்று சொல்ல வேண்டியவர்கள் தமிழ் மக்களே. தமது ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் தான் என்பதை தமிழ் மக்கள் உறுதியாகப் பறை சாற்றியிருக்கும் நிலையில், மகிந்தவின் கருத்து ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.
பயங்கரவாதம் என்று ஒன்றில்லை. தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கவும் தனது சுயநல அரசியலுக்காகவுமே அதனை பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை மகிந்த பயன்படுத்தி வருகிறார். இராணுவ வழிமுறையிலேயே தீர்வுகாண முயற்சிக்கும் மகிந்த அரசாங்கத்தின் கொள்ளைகளை வலுப்படுத்தவே இந்தப் பயங்கரவாதம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு, அதன் போர்வையில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் மிதிக்கப்படுகின்றன.
இதனடிப்படையில் யுத்தத்தை முன்னிலைப்படுத்தியுள்ள இந்த அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக நாம் வாக்களிப்போம். நாம் தனித்தே இம்முடிவை எடுத்துள்ளோம் என்றார் அவர்.
Tuesday, October 02, 2007
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள்: மகிந்தவுக்கு செல்வம் அடைக்கலநாதன் பதில்
Tuesday, October 02, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.