Tuesday, October 02, 2007

அரசாங்க எதிர்ப்பு சுவரொட்டிகளை சுமந்து வந்த "மகிந்தவின் பொதிகள்"

[செவ்வாய்க்கிழமை, 2 ஒக்ரொபர் 2007] அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவுக்குத் திரும்பிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணப் பொதிகளில் மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சிறிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க வானூர்தி நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "நாட்டைப் பாழடிக்கும் வகையில் பொதுமக்களின் பணத்தில் வெளிநாட்டுப் பயணமா?" என்பது போன்ற சிறு சுவரொட்டிகள் மகிந்தவின் பொதிகளில் ஒட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சிறு சுவரொட்டிகள், கொழும்பில் ஒட்டப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் ஒருநாட்டு வானூர்தி நிலையத்தில் ஒட்டப்பட்டனவா என்பது குறித்து சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.