Thursday, September 20, 2007

சிறிலங்கா மீது அனைத்துலகத்தின் தடை விதிக்கும் காலம் நெருங்கிவிட்டது: மனோ கணேசன்

[வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2007]

மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா மீது அனைத்துலகம் தடை விதிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்து:

சிறிலங்காவின் தேசிய மனித உரிமைகளுக்கான ஆணையம் உள்ளிட்ட 7 உள்நாட்டு அமைப்புக்கள் இணைந்து மக்கள் கண்காணிப்பு குழுவை உருவாக்கியுள்ளோம்.

மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கதுக்கு எம்மால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஆனால் அனைத்துலகத்தின் அழுத்தம் கொடுக்கப்பட்டால், அனைத்துலகம் எதிர்வினையாற்றினால் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் சிறிலங்கா மீதான தடை என்பது கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.