[வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2007]
தமிழீழத்தின் ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி உத்தியோகப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி இன்று வெள்ளிக்கிழமை காலை முடிவை அறிவிப்பதாக அய்யா பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து நேற்று இரவு சேலம் புறப்பட்டுச் சென்ற முதல்வர் கருணாநிதி சென்னை தொடரூந்து நிலையத்தில் தனது கைப்பட பழ. நெடுமாறனுக்கு உத்தியோகப்பூர்வ கடிதத்தில்; உள்ள விவரம்:
பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு
வணக்கம்.
ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.
ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மு. கருணாநிதி.
என்று முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
இக்கடிதம் பற்றிய செய்தி திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயாலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஊடாக கவிஞர் காசி ஆனந்தனின் மூலமாக பழ. நெடுமாறனிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கலைஞரின் தனிப்பட்ட கடிதம் தமக்குத் தேவையில்லை என்றும் யாழ். தமிழ் மக்களுக்கு உணவு மற்று மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதிக்கிறோம் என்ற இந்திய மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம்தான் தமக்குத் தேவை என்றும் பழ.நெடுமாறன் பதிலளித்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு பழ.நெடுமாறனை நேரில் சந்தித்தனர்.
முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பழ.நெடுமாறன், இது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நாளை காலை போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி என் முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
நன்றி:புதினம்
Friday, September 14, 2007
போராட்டத்தைக் கைவிட முதல்வர் கலைஞர் உத்தியோகப்பூர்வமாக வேண்டுகோள்- காலையில் முடிவை அறிவிப்பதாக பழ. நெடுமாறன் தகவல்!
Friday, September 14, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.