[வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2007]
தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சிறப்பாகச் செயற்பட்ட அரசியல் போராளி லெப். கேணல் திலீபன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார்.
புலிகளின்குரல் நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன் 20 ஆம் ஆண்டு நினைவின் 5 ஆம் நாள் நிகழ்வில் யோகரட்ணம் யோகி பேசியதாவது:
தாயகத்தில் மக்கள் மத்தியில் சிறப்புற விடுதலைக்கான அரசியல் பணியை செய்தவர் திலீபன்.
விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கும் வகையில் தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தளபதி கேணல் கிட்டுவின் வழிகாட்டலில் திலீபன் சிறப்புற தனது பணியை மேற்கொண்டார்.
தனது பணியில் இறுக்கமாகவும், மக்களின் அன்பைப் பெற்றவருமான திலீபன் தனது குறிக்கோளில் உறுதியாக நின்று செயற்பட்டார். இந்தியப் படையின் வருகையின் நோக்கத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெளிவுபடுத்தியவர். அதேபோல் தனது உண்ணாநோன்பின் மூலம் சிறிலங்காவின் முகத்திரையை அவர் கிழித்தார் என்றார் யோகி.
புலிகளின்குரல் நிர்வாக இணைப்பாளர் இ.எழிலூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலிகளின்குரல் நிறுவனப்பொறுப்பாளர் நா.தமிழன்பன், புலிகளின்குரல் நிகழ்ச்சி அமைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.