[வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2007]
சிறிலங்காப் படையினரின் கிபிர் விமானங்கள் இன்று 11.30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் வீடுசேதமடைந்துள்ளது.
இத்தாக்குதலில் வீடுமுற்றாகச் சேதமடைந்துள்ளதோடு ஆறுபொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் சிறிலங்காப்படையினரின் விமானத்தாக்குதலினால் மயக்கமடைந்ததுள்ளனர்.


விமானத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களான
1. திருமதி.நாகேந்திரம் கௌரி (வயது22) (இரண்டுமாதக்குழந்தையுடன் குடும்பப்பெண்) வள்ளிபுனம்
2. துரைசிங்கம் (வயது 65) புதுக்குடியிருப்பு
3. சிவராசா இராசலிங்கம் (வயது 40) புதுக்குடியிருப்பு
4. டனியல் விக்றோரியா (வயது65) புதுக்குடியிருப்பு
ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரின் பெயர்விபரம் கிடைக்கப்பெறவில்லை.
இத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். கோணாவில் பாடசாலை மாணவியான பாலசுப்பிரமணியம் பாமதி (வயது 13) தரம்-02 மற்றும் மகேஸ்வரன் சறோஜினி (வயது12) 2ம் தரம் ஆகிய பாடசாலை மாணவிகளே மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thursday, September 20, 2007
புதுக்குடியிருப்பில் மீண்டும் வான் தாக்குதல்: 6 பொதுமக்கள் படுகாயம்.!
Thursday, September 20, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.