Monday, August 06, 2007

வடக்கு அபிவிருத்திக்காக "சமாதானம்" தொடர்பில் கவனம் செலுத்துவோம்: மகிந்த ராஜபக்ச

[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007] வடக்கு அபிவிருத்திக்காக சமாதானம் தொடர்பில் கவனம் செலுத்தப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சீன உதவியுடன் அமைக்கப்பட உள்ள நுரைச்சோலை அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு மகிந்த பேசியதாவது: கிழக்குப் பகுதியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. வடக்கிலும் இதேபோன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு சமாதானத்தின் பக்கம் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இப்பாதையில் எதிர்கொள்;ளும் சில தடங்கள்களுக்காக அபிவிருத்தி நடவடிக்கைள் ஒருபோதும் இடை நிறுத்தப்படமாட்டாது. சிறிலங்காவில் நடைபெற்ற எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்துக்கும் ஒதுக்காத பெருமளவு நிதியை நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இம்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டு நிறைவடையும். இதன் மூலம் மூலம் 900 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தொடக்க கட்டத்தில் 600 மெ. வா. மின்சாரமும் இரண்டாம் கட்டத்தில் 300 மெ. வா. மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். சீன அரசாங்கத்தின் நீண்டகால கடன் உதவியின் கீழ் 435 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்பை வழங்கி சீன அரசாங்கம் நல்கிய ஒத்துழைப்பிற்கு சிறிலங்கா மக்களின் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பது கடமையாகும். இத்திட்டதின் மூலம் வீடுகளை இழக்கும் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடனும் வேறு இடங்களில் அவற்றைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை 936 மில்லியன் ரூபா. உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்த போதிலும் எமது அரசாங்கம் அதனைச் சுமந்து கொண்டு முடியுமான வரை சாதாரண விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகின்றது. இந்த மின் நிலையம் மூலம் மின்சாரத்தைக் குறைந்த விலையில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இது வரை மூன்று பாரிய மின் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது என்றார் மகிந்த.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.