[புதன்கிழமை 8 ஓகஸ்ட் 2007] யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள புதிய தபாற் கந்தோருக்கு முன்னால் இராணுவத்தினர் புதிய காவரண் ஒன்றை சீமெந்தினால் அமைத்து வருகின்றார்கள். தற்போது குறிப்பிட்ட முற்றவெளியில் இருந்து தனியார் சிற்றார்திகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பன தமது சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஏற்கனவே இந்தப் பகுதிக்கு வாகனங்களின் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரினதும் இராணுவப் புலனாய்வாளர்களினதும் ஒட்டுக் குழுக்களினதும் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய நிலமையில் தபாற்கந்தோர் மற்றும் வாகணத்தரிப்பிடம், மீன் சந்தை என்பவற்றிற்கு வருபவர்களையும் மற்றும் தீவகத்திற்கான போக்குவரத்தை ஏற்கனவே இருக்கும் சோதனை நிலையங்களுக்கு மேலதிகமாக கண்காணிக்கக் கூடிய முறையிலும் குறிப்பிட்ட காவல் நிலையம் சீமெந்து கொண்டு கட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Wednesday, August 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.