[புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2007] நேற்றுமுன்தினம் வவுனியா உலுக்குளம் பகுதியில் ஊர்காவலர் மீது நடத் தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஊர்காவலர்கள் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றில் இது குறித்துத் தெரிவித்திருக்கின்றார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கின்றவை வருமாறு : 20ஆம் திகதி செட்டிக்குளம் பிர தேசத்திலுள்ள சுமதிபுர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 05 ஊர்கா வலரும் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, ஊர்காவற்படையினரும் எல்.பி கொலனி, அளுத்கம, சுமதிபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் சம்பவம் நடந்த இடத்திலி ருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவி லுள்ள வீரபுரம் என்ற தமிழ் கிராமத் திற்குள் புகுந்து பொதுமக்களைத்தாக்கியதுடன், இம்மக்களின் பெறுமதியான சொத்துக்களையும் சூறையாடிச் சென்றுள்ளனர். மேற்படி கிராமத்திலுள்ள பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் கூட கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக, வீரபுரம் கிராம அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகம் நாகலிங்கம் (வயது 55) என்பவர் அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும்,அவ்வேளையில் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கைப் போக்கு வரத்துச் சபை பஸ்ஸின் சாரதியாகிய செந்தில்நாதன் (வயது 35) ஊர்காவ லரால் சம்பவம் நடந்த இடத்தில் வைத்து பஸ்ஸில் இருந்து பலவந்தமாக இறக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன். மேற்படி வீரபுரம் உட்பட செட்டிக் குளம் பகுதி மக்கள் இதற்கு முன்ன ரும் பல தடவைகள் பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தலுக்குள்ளா னமையால், அங்கிருந்து அகதிகளாக இந்தியாவிற்கும் வேறு இடங்களுக்கும் நாளாந்தம் வெளியேறிச் சென்ற வண்ணமுள்ளனர். தற்போது மீதமாகவுள்ள மக்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஜீவனோ பயத்திற்காக அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் மிகவும் வறிய மக்களே இக்கிராமத்தில் வாழந்து வருகின்றனர். ஏற்கனவே,வாழ்வதற்காகப் போராடும் மேற்படி அப்பாவிப் பொதுமக்கள் மீது அரச படைகளும் சிங்களக் குண்டர்களும் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரச படைகளே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றன. அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் அடிக்கடி நடக்கும் மோதல்கள் காரணமாக, ஆத்திர முற்று, பழிதீர்க்க முற்படும் அரச படையினர் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை இலக்கு வைப்பது இனிமேலும் தொடராமல் இருப்பதை, உறுதிப் படுத்துவது இலங்கை அரசின் கடமையாகும். இதனைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையல்ல என்று உதறித் தள்ளிவிடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - உதயன்-
Wednesday, August 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.