Friday, August 24, 2007

நன்றி கூறுகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி

[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007]

கடந்த 20.08.2007 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட எனது சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் அவர்களின் இறுதிச் சடங்கு உட்பட ஒவ்வொரு வேலைகளிலும் பங்கேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற அன்பர்கள், வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், ஊழியர்கள், தொலைபேசி மூலமும் தந்தி மூலமும் என்னுடனும் அன்னாரின் குடும்பத்தினருடனும் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்த அன்பர்கள், இறுதிச் சடங்கில் நேரடியாகக் கலந்து கொண்ட பொதுமக்கள், நண்பர்கள், வெளிநாடுகளிலிருந்து என்னுடன் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்த புலம் பெயர் உறவுகள், என்னுடன் தொடர்பு கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், என்னை நேரடியாகச் சந்தித்து அனுதாபம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அனுதாபச் செய்தி அனுப்பி வைத்த அமெரிக்க தூதுவர், சுவிஸ் தமிழர் பேரவை, கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள், காகித ஆலை ஊழியர்கள், அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் வைத்தியசாலை தொடக்கம் இறுதி நிகழ்வு வரை பல்வேறு வேலைகளையும் நேரடியாக நின்று செய்து முடித்த எனது உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் விசேடமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் அனைவருக்கும் நேரடியாக நன்றி தெரிவிக்க காலச்சூழல் இடம் தராததால் இவ் நன்றி நவிலலை பெரும் மனங்கொண்டு ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி:பதிவு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.