Wednesday, August 15, 2007

இலங்கை கடத்தல்களில் 5700 பேரை காணவில்லை- சர்வதேச மன்னிப்பு மனித உரிமைகள் குழு

[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007]

கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் இலங்கையி 5700 வரை காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.2006 முதல் நூற்றுக்கனகான பொதுமக்கள் பாதுகாப்பு படையினராலும் ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் இலங்கையின் வடக்கிலும் கிழக்குலும் கொழும்பிலும் கடத்தப்பட்டுள்ளதாக இலண்டணை தளமாக கொண்ட மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் எதிர்வரும் 30ம்திகதி காணாமல் போனோர் தினம் அனுஷ்டிக்கப்படுள்ளதை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வொரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் விசாரணைக்குற்ப்படுத்தப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளனர்.அந்த வகையில் பாதுகாப்பு படையினரின் முழுமையான பாதுகாப்பிலுள்ள வைத்து கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த டிசேம்பர் மாதம் இனந்தெரியாத குழுவொன்றில்னால் கடத்தப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரின் பாதுகாப்பிலுள்ள இடத்திலிருந்து துணைவேந்தர் கடத்தப்பட்டதன் மூலம் இராணுவ துணைக்குழுக்களே இக்கடத்தல் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லையென மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி தெரிவித்துள்ளது.

இவ்வறிக்கை தொடர்பில் அரசு இதுவரை எதுவித கருத்துகளையும் வெளியிடவில்லை எனினும் கடத்தல்கள் தொடர்பில் விடுக்கப்படும் அறிக்கைகளிற்கு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாக ஏ.எப்.பி மேலும் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.