Friday, August 24, 2007

ஓமந்தை சோதனை நிலையம் 5 நாட்கள் திறப்பு

[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007]

வவுனியா மாவட்டம் ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் 5 நாட்கள் திறக்கப்படும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு தெரிவித்துள்ளது.

ஓமந்தை சோதனை நிலையத்தை வாரத்தில் 7 நாட்களும் திறக்க வேண்டும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினருடனான நேற்றைய சந்திப்பின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் வாரத்தில் 5 நாட்கள் ஓமந்தை சோதனை நிலையத்தை திறக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிறுவனங்களுக்கான விடுதலைப் புலிகளின் இணைப்பாளர் பாவரசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் 5 நாட்கள் திறக்கப்படும் என்றும் பாவரசன் கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்தி: ஓமந்தை சோதனைச் சாவடியை 7 நாட்களும் திறக்க புலிகள் வலியுறுத்தல்

நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.