Sunday, August 12, 2007

யாழ். கிளைமோர் 4 இராணுவத்தினர் பலி- 13 பேர் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007] யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இன்று முற்பகல் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து தச்சன்தோப்புப் பகுதியில் ஈருருளியில் பொருத்தப்பட்டிருந்த 2 கிளைமோர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் பலாலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறிலங்க இராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் யாழ். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். அந்த இளைஞர் நாவற்குழியைச் சேர்ந்த எஸ்.மதனரூபன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.