[புதன்கிழமை, 18 யூலை 2007,] யாழ். வலிகாமம் கிழக்கில் நீர்வேலியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் வீசப்பட்டிருந்த இந்த சடலம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உள்ளுர் கிராம அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கோப்பாய் சிறிலங்கா காவல்துறையினருக்கு உள்ளுர் கிராம அதிகாரி தகவல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினர் இன்று புதன்கிழமை மயானத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு யாழ். மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காணுமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு மல்லாகம் நீதிபதி சரோஜினி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, July 18, 2007
நீர்வேலியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு.!!
Wednesday, July 18, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.