Sunday, June 17, 2007

அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு.

[ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் செயற்படும் என்றும் கூறப்படுகிறது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டு வருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.