[திங்கட்கிழமை, 18 யூன் 2007]
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
அரசாங்கம் அமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 17 பேருக்கான அமைச்சகங்களை அமைக்க 65,756,100 ரூபாவுக்கான கூடுதல் நிதி நிலை அறிக்கையை மகிந்த அரசாங்கம் நாளை தாக்கல் செய்ய உள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இந்த கூடுதல் நிதி நிலை அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
"அண்மைய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட பெருந்தொகையான கூடுதல் நிதிநிலை அறிக்கை இதுதான். இத்தகைய கூடுதல் நிதி நிலை அறிக்கைகளால் ஆண்டு நிதிநிலை அறிக்கை என்பது நகைப்புக்கிடமாகி விட்டது. நாட்டின் பொருளாதாரம் நாசமாகிக் கிடக்கிறது" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
"நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையில் அரசாங்கத்தின் தொகையை வீணடிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சிகளை விட அரசாங்கத்துக்கு 16 வாக்குகள் அதிகம் இருப்பதால் பிரச்சினை ஏதும் இல்லை என்று அரசாங்க கொறாடாவான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில் 104 பேரும் அரசாங்கத்தரப்பில் 120 பேரும் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் முன்னாள் அமைச்சர்களான சிறீபதி சூரியராச்சி மற்றும் மங்கள சமரவீர ஆகியோரது நிலைப்பாடு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தற்போது லண்டனில் உள்ள மங்கள சமரவீர அனேகமாக நாளை கொழும்பு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இவற்றைச் சுட்டிக்காட்டும் கொழும்பு அரசியல் நோக்கர்கள், மகிந்த அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதற்கான உரிய வாக்குகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மூலம்: புதினம்

எப்பிடியும் குதிரை ஓடியாவது பரீட்சையை மகிந்து பாஸ் பண்ணிவிடுவான்...
ReplyDelete"நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையில் அரசாங்கத்தின் தொகையை வீணடிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்...
அதென்ன தொகை? பிணங்களின் எண்ணிக்கையா?