Friday, June 15, 2007

சிறிலங்காப் படையின் 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மாற்றம்.!

[வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007] சிறிலங்கா அரசினால் புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மாற்றியுள்ளார். வவுனியா ஓமந்தைக்கு மேற்கே உள்ள கல்மடுவை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் 57 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியான பிரிக்கேடியர் சுமித் மானவடு, கிழக்குப் பிராந்திய பிரிக்கேடியர் ஜெனரல் அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். 57 ஆவது படையணியின் புதிய தளபதியாக 56 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிக்கேடியர் சுளா டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக புதிதாக அமைக்கப்ட்ட 57 ஆவது படையணியினால் ஓமந்தைக்கு மேற்காக பல படை நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் அவற்றில் எவையும் இலக்கை அடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இரு வாரங்களுக்கு முன்னர் விளாத்திக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த படையணியின் 30 படையினர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், சில டசின் படையினர் காணாமல் போயும் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.