[திங்கட்கிழமை, 21 மே 2007] சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் இராணுவ பத்தி ஆய்வாளரான, மூத்த ஊடகர் இக்பால் அத்தாசின் பாதுகாப்பு சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய நீக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் இக்பால் அத்தாசிஸிற்கு தற்பொழுது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற போர்வையில், சிறீலங்கா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த வார சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ் எழுதிய ஆய்வில், விடுதலைப் புலிகளிடம் 10 இலகு ரக வானூர்திகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இக்பால் அத்தாஸின் இந்தத் தகவலுக்கான ஆதாரத்தைத் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி நிமல் குலதுங்க கேட்டுள்ளார். சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் இக்பால் அத்தாசுக்கு கொமாண்டோ படையைச் சேர்ந்த இரண்டு படையினர் பாதுகாப்பு வழங்கிவந்த நிலையில், அரசை தொடர்ச்சியாக விமர்சித்துவந்த இக்பால் அத்தாஸின்; பாதுகாப்பு நிறுத்தப்படவி;ல்லை. மோர்ணிங் லீடர் ஆசிரியர் சோனாலி சமரசிங்க அண்மையில் வெளியிட்ட இராணுவ ஆய்வுக்கான தகவல் எங்கிருந்து பெறப்பட்டது என்பது பற்றியும் சிறீலங்கா குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தியதுடன், ஆதரத்தை சமர்ப்பிக்கத் தவறினால் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் போவதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. ஊடகர்கள் மீதான சிறீலங்கா அரசின் இவ்வாறான கெடுபிடிகளை பல ஊடக அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
Monday, May 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.