Thursday, May 31, 2007

சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு.!

[வியாழக்கிழமை, 31 மே 2007]

சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த கடற்ரோந்தே சிறந்த வழிமுறை என நினைக்கிறேன். தமிழக மீனவர்கள் கடல்லெல்லையைத் தாண்டி அத்துமீறி உள்நுழைந்தாலும் அவர்களை சுடவேண்டாம் என இலங்கை அரசிடம் வலியுத்தியுள்ளோம். இதற்கு இலங்கை அரசும் இணங்கியுள்ளது எனவும் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. யோவ்! இந்தியா மீது இல‌ங்கைத் த‌மிழ‌ருக்கு வெறுப்பு உருவாக்கும் உன் த‌லைப்பை மாற்றித் தொலை.



    " சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்."

    ReplyDelete
  2. ஆயுதங்களில் தற்காப்பு ஆயுதங்கள் தாக்குதல் ஆயுதங்கள் என்று இரு பிரிவுகள் இருப்பது நாராயணன் சொல்லித்தான் தெரிந்தது.
    அவ்வாயுதங்கள் எவை என்பதையும் நாராயணனே சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

    தற்காப்பு ஆயுதங்கள் என்றால் கேடையம், மார்புக் கவசம் போன்றவையா ?

    ReplyDelete
  3. யார் என்ன தடை போட்டாலும் தமிழீழம் மலர்வது நிச்சயம்!
    அது காலத்தின் கட்டளை.

    எந்த வல்லரசும் எந்த வல்லூறும் காலத்தின் கட்டளைக்கு தலைவணங்கி தான் ஆகவேண்டும்.

    ReplyDelete
  4. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அறிவிப்பால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.