Friday, May 18, 2007

அனைத்துலக மன்னிப்புச்சபையின் வருடாந்த அறிக்கை அடுத்த வாரம்.!!

[வெள்ளிக்கிழமை, 18 மே 2007] அனைத்துலக மன்னிப்புச் சபையினால் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ள உலகில் 'மனித உரிமைகளின் நிலை' என்னும் அறிக்கை எதிர்வரும் வாரம் பிரித்தானியாவில் வெளியிடப்படவுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 'உலகில் மனித உரிமைகளின் நிலை' தொடர்பான எமது வருடாந்த ஆய்வே இது. இந்த அறிக்கை சிறிலங்கா உட்பட 150 நாடுகளை உள்ளடக்கியது என்பதுடன் அவை எவ்வாறு மனித உரிமைகளை மதிக்கின்றனர் என்பது தொடர்பானதுமாகும் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அதிகாரியான சாரிய றீஸ் றொபேட்ஸ் தெரிவித்தார். இதனிடையே பிரித்தானியாவில் எதிர்வரும் புதன்கிழமை ஊடகங்களுக்கு வெளியிடப்பட உள்ள இந்த அறிக்கையில் சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் முதன்மைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.