Tuesday, February 13, 2007

இரு தமிழ மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் தடுத்து வைப்பு.

[செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007]


கண்ணிவெடிகளைச் செய்யப் பயன்படுத்தப்படக் கூடிய பொருட்களை இலங்கைக்கு கடத்த முய்ன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு தமிழக மீனவர்களை, இந்தியக் கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

இது பற்றிக் கூறிய ராமேஸ்வரம் கப்பற்படைத் தளத்தின் தலைவர் சுப்ரட்டோ முகர்ஜி, அந்த இரண்டு மீனவர்களும் நேற்று இரவு நடுக்கடலில் தமது படகு பழுதுபட்டதால் தவித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இந்தியக் கடற்படையினர், அந்தப் படகைச் சோதனையிட்ட போது, அதில் 2800 கிலோ எடையுடைய பிளாஸ்டிக் மற்றும் அலுமினியப் பொருட்களைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.

இராமேஸ்வரம் பகுதியில் பாம்பனைச் சேர்ந்த அந்த இருவரும் மன்னார் வளைகுடாவில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் வெடிகுண்டுகள் செய்யப்படக் கூடிய 5 டன் சைக்கிள் குண்டுகளை தமிழகத்தில் இரு இடங்களில் இருந்து பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.