Tuesday, February 06, 2007

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படும்.

[செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007]

இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத் தலைவர் ஜே. எம் லொக்குபண்டாரா தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை ரணில் வெளியிட உள்ளார். அதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையை அவர் விளக்குவார் என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் உள்ளதாகவும், ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இணைந்தது இரு கட்சிகளும் நாட்டின் நலனுக்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாதிக்காது எனவும் அரசு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.