தொப்பிகல வரையிலான பகுதிகளை மீட்கும்வரை இராணுவ நடவடிக்கை கிழக்குக் கட்டளைத் தளபதி தெரிவிப்பு
[Thursday January 25 2007 ] [uthayan.com]
கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து பெரு மளவு ஆயுதங்களை நாம் மீட்டுள்ளோம். அதில் 2 பெரிய ஆட்லறிப் பீரங்கிகளும் அடங்கும். கைவிடப்பட்ட இம்முகாமில் பெரும் எண்ணிக்கையான வாகனங்களைப் புலிகள் தீயிட்டுச் சென்றுள்ளனர். இவை அனைத்தும் எரிந்த நிலையிலேயே காணப் பட்டன என்றார்.
Thursday, January 25, 2007
தொப்பிகல வரையிலான பகுதிகளை மீட்கும்வரை இராணுவ ...
Thursday, January 25, 2007





