ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் ஜனாதிபதியுடனும் அரச அதிருப்தியாளர்கள் சந்திரிகாவுடனும் இணைவர்?
ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் குழு இவ்வாரம் அரசாங்கத்துடன் இணையவுள்ளது. அதேவேளை,அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் அணிதிரளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்பொருட்டு சுமார் 20 பேரடங்கிய சு.க. உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையின்கீழ் அணி சேரலாம் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் குழு அரசாங்கத்துடன் இணைவதன் காரணமாக சு.க. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பதவிகள் பறிபோக உள்ள நிலையினாலேயே அவர்கள் அரசாங்கத்துடன் அதிருப்தி கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் தலைமையின்கீழ் இணையவுள்ளதாக தெரிய வருகின்றது.
virakesari.lk
Monday, January 22, 2007
அரச அதிருப்தியாளர்கள் சந்திரிகாவுடனும் இணைவர்?
Monday, January 22, 2007





