வவுணதீவில் நேற்றிரவு அதிரடித்தாக்குதல் - படையினரின் சடலங்களும் மீட்பு
[Monday January 22 .2007 ]
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் படைத்தளத்தின் காவலரண்கள் மீது நேற்றிரவு அதிரடித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது கொல்லப்பட்ட படையினரின் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு இரவு 11.10 மணியளவில் தமது கண்காணிப்பு நிலை ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.இத்தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகளால் வவுணதீவு படைத்தளம் மீது ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்காரணமாக நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வவுணதீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவரின் உடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலின்போது படையினருக்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் அறியப்படவில்லை. இது குறித்த விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Monday, January 22, 2007
வவுணதீவுப் படைத்தளத்தின் காவலரண்கள் மீது நேற்றிரவு..
Monday, January 22, 2007





