Thursday, January 18, 2007

புலிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை....

புலிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் கிடைத்தனவாம்! பாதுகாப்பு பேச்சாளர் தெரிவிப்பு [Thursday January 18 2007 ] [uthayan.com] வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழீழ விடு தலைப் புலிகளுக்குப் பல வருட கால மாக உதவி செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சரும், தேசிய பாது காப்புக்கான பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: நான்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா கச் செயற்படுகின்றன என்றும், அவை பல வழிகளிலும் புலிகளுக்கு உதவி செய்து வரு கின்றன. நாம் நான்கு மாதங்களுக்கு முன் இது பற்றிக் கூறினோம். இதற்கான தகுந்த ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இந்த நிறுவனங்களைத் தடை செய்யவேண்டும் என்றும் கூறிவந்தோம். ஆனால், மக்களுக்கு உதவி செய்கின்ற இந்நிறுவனங்கள் மீது அநியாயமாக நாம் குற்றம் சுமத்துகிறோம் என அந்நிறுவனங்கள் கூறின. இப்போது அந்நிறுவனங்கள் புலிக ளுக்கு உதவிசெய்தமை தொடர்பான தகுந்த ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. செவ் வாய்க்கிழமை அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி யதைத் தொடர்ந்து இந்த ஆதாரங்கள் எம் கைகளுக்குக் கிடைத்துள்ளன. அம்முகாமில் இருந்த மின்பிறப் பாக்கி, தண்ணீர் பவுஸர், அரிசி மூட்டைகள் போன்ற பல்வேறு பொருட்களை இந் நிறுவனங்கள் வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. அப்பொருட்களின் மீது அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு உதவி செய்வதுபோல் நடித் துக் கொண்டு எமது நாட்டில் வன்முறை யைத் தூண்டிவிடும் விதத்தில் புலிகளுக்கு இந்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்தமையையிட்டு நாம் கவலை அடைகின்றோம். குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களையும் இலங்கையில் தடைசெய்ய அரசு நடவ டிக்கை மேற்கொண்டபோது அந்நிறு வனங்கள் அரசிற்குக் கடிதம் எழுதி அவ் வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டன. நாம் அவை திருந்துவதற்கு வாய்ப்புக் கொடுத்தோம். ஆனால், அவை திருந்தவில்லை என்றார்.