Wednesday, January 10, 2007

இராணுவத் தாக்குதல் நீடித்தால் பேச்சு நடப்பது சாத்தியம்..

இராணுவத் தாக்குதல் நீடித்தால் பேச்சு நடப்பது சாத்தியம் அல்ல! Wednesday, 10 January 2007 இலங்கை அரசுப் படைகள் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சமாதானப் பேச்சுக்குச் செல்வது என்ற தங்களின் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டிய துர்ப்பாக்கியமான கட்டாயம் ஏற்படும் என்று விடுதலைப் புலிகள் எச்சரித்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், நேற்றுமுன்தினம் இரவு நோர்வேயின் விசேட சமாதானத் தூதர் ஹன்ஸன் போவருக்கு அவசர கடிதம் ஒன்றின் ஊடாக இதனை அறிவித்திருக்கின்றார். கிழக்கில் வாகரையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேச எல்லையில் மூண்ட கடும் சண்டையை அடுத்து புலிகளின் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. வாகரை, பனிச்சங்கேணியில் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்தினுள் அரசுப்படைகள் சுமார் மூன்று மைல் தூரம் முன்னேறித் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படும் சமயத்தில் புலிகள் நோர்வேத் தரப்புக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்று ஏஜென்ஸி செய்தி ஒன்று தெரிவித்தது. வாகரை நிலைமை தொடர்பாக விடுதலைப் புலிகளின் பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் இரவு அவசரமாக ஆராய்ந்த பின்னர் தமிழ்ச்செல்வனின் கடிதம் உடனடி யாகவே விசேட தூதர் ஹன்ஸன் போவருக்கு அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இணைத் தலைமை நாடுகளின் வேண்டு கோளின் பேரில் நடைபெற இருக்கும் உத் தேச சமாதானப் பேச்சுகளில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்திருந்தனர். பேச்சு நடத்துவதற்கான திகதிகளை அரசுத் தரப்பும் நோர்வேயிடம் தெரி வித்திருந்தது. பேச்சு நடத்தும் இடம், திகதி என்பன தொடர்பான அரசின் யோசனை நோர்வேத் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டு, 48 மணித்தியாலங்களுக்குள் கிழக்கில் இரு தரப்பினரிடையேயும் சண்டை மூண்டுள் ளது. பேச்சுக்கான ஏற்பாடுகள், சூழ்நிலைகளை இது பெரிய அளவில் பாதித்திருப்பதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வினரும் ராஜதந்திரிகளும் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். நன்றி - உதயன்