Wednesday, January 10, 2007

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இம்மாதம்..

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இம்மாதம் 27ம் நாள் நடத்த காலியில் ஏற்பாடு இலங்கைக்கு உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு இந்த வருடம் ஸ்ரீலங்காவின் தென்பகுதி நகரான காலியில் நடத்தப்படவுள்ளது இம்மாதம் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை காலியில் உள்ள வெளிச்ச வீட்டு விருந்தினர் விடுதியில் இந்த மகாநாடு நடத்தப்படவுள்ளது இதில் அமெரிக்கா பிரித்தானியா ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகளினதும் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் இந்த நாடுகளினால் 120 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றிருந்தது இந்த வருடம் அதனை விட கூடுதலான நிதி உதவியினை ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்பார்பதாக தெரியவந்துள்ளது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அபிவிருத்தி பணிகளுக்கு பெருமளவு நிதி உதவியினை வழங்கி வருவதால் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது சொந்த வருமானத்தில் யுத்த தளபாடங்களை அதிகளவில் வாங்கி வருவதாக சர்வதேச பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் இதனை தெளிவாக புரிந்து கொண்டுள்ள உதவி வழங்கும் நாடுகள் இம்முறை ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கும் அளவிற்கு உதவிகளை வழங்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே முழுமையான உதவித் தொகைகளை வழங்க முடியுமட் என்று உதவி வழங்கும் நாடுகள் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவத்தை கொண்டுள்ள ஜேர்மனி இலங்கை அரசாங்கம் சமாதான முயற்ச்சிகளுக்கு திரும்பும் வரையில் உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது