Monday, January 08, 2007

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை..

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை ஸ்ரீலங்கா அரசு தீவிரப்படுத்தியுள்ளது. Monday, 08 January 2007 ஸ்ரீலங்கா அரசு வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு விசேட பிரதிநிதிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அதேவேளை வெளிநாடுகளில் இருக்கும் சகல தூதரகங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பாரியஅளவிலான பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தூதரகங்களின் மிகமுக்கியமான பணி விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன்னவுக்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதற்கான முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து பாலித கோகன்ன அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கு தென்அவுஸ்திரேலிய சமஷ்டி செனட்டர் ஸ்ரீவ் குடெஹிம் உட்பட அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளார். சுகல தூதரகங்களும் அந்தந்த நாட்டு ஊடகங்களுடன் தொடர்புகளை கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன.