இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் விரைவில் கூடுவர்
இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமைநாடுகளான அமெரிக்கா,நோர்வே,யப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்கள் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்,யப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சமாதான முயற்சிகள் தேக்கமடைந்துள்ளமை, இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமனித உரிமை மீறல்கள்,மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவும் எதிர்கால சமாதான பேச்சுக்களில் அதன் தாக்கம் என்பன தொடர்பாகவும் இவர்கள் கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கையின் தற்போதய நிலைமை மற்றும் அதிகரித்துச் செல்லும் வன்முறைகள்,அதிகரித்து மோதல்கள், மோதல்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமை என்பன தொடர்பாக இலங்கையில் உள்ள மேற்குறிப்பிட்ட நாடுகளின் தூதுவர்கள் தொடர்ச்சியாக கூடி ஆராய்ந்து வருவதாக அமெரிக்க தூதரக பேச்சாளர் கேசரிக்குத் தெரிவித்தார்.
Monday, December 18, 2006
இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் விரைவில் கூடுவர்.
Monday, December 18, 2006





