பொதுமக்களை கொலை செய்யும் நாட்டிற்கு உதவியில்லை - சோனியா காந்தி பொதுமக்களை கொலை செய்யும் ஒரு நாட்டிற்கு தமது அரசாங்கம் எந்த விதமான வெடிமருந்துகளையும் வழங்காது என இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் சிறீலங்கா கடற்படைக்கு முகவரியிடப்பட்ட வெடிபொருட்கள் சிலவற்றை இந்திய காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர் சிறீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த வெடிமருந்துகளை அனுப்பி வைத்திருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது





