நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த: கொழும்பு ஆங்கில நாளேடு
சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான் உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவின்றி ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வரும் அரச தலைவர் என்று கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு நாளேடு மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பி. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கு நன்மை கிட்டும் வரைக்கும் தான் அவர்களின் ஆதரவு தொடரும்.
எனவே மகிந்த ஒரு பெருன்பான்மை அரசை அமைக்க வேண்டுமாக இருந்தால் ஜே.வி.பி.யை அரசுக்குள் இழுக்க வேண்டும் அல்லது ஐ.தே.கவில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும். இந்த முயற்சிகள் தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த இரு முயற்சிகளும் பலன் அளிக்காவிட்டால் எதிர்வரும் வருடம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்துவது தான் மகிந்தவின் திட்டமாகும்.
வாகரையை கைப்பற்றி விட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கும் அரசு எண்ணியுள்ளது. வாகரையை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதுடன் பிரச்சாரத்திற்கும் அனுகூலமானது என்பது மகிந்த ராஜபக்சவின் கருத்து என்று கொழும்பு நாளேடு தெரிவித்துள்ளது.
Friday, December 29, 2006
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த:
Friday, December 29, 2006





