தலைவர் மீதும் போராளிகள் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவர் பாலா காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அஞ்சலி
தேசத்தின் குரல் அன்டன் பாலசிங் கம், தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடி யாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தான் படித்த விடுதலைத் தத்துவம், அத னூடாக தான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செய லும் தான் காண்கிறார் என்றும், அதனால் தான் தலைவரின்பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டார் என்றும் அன்டன் பாலசிங்கம் தெரிவித்து வந்தார்.
எமது போராட்டச் செயற்பாடுகளுடன் இணைவதற்கு முன்பாக இங்கிலாந்தில் ஒரு உளவியல் நிபுணராக உளவளத் துணை ஆலோசகராக இருந்து செயற்பட்ட அவர், ஆரம்பத்தில் சாதாரண பத்திரிகை யாளராக தனது வாழ்வைத் தொடங்கி, ஆங்கில மொழியில் நிபுணராக, அரசிய லில் அறிஞராக சமூகத்தின் சகல துறைகளை யும் கற்றுத் தேர்ந்து இறுதியில் அரசியல் ஆலோசகராக எமது போராட்டத்திற்கு அவர் கிடைக்கப்பபெற்றார்.
அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமிழீழ விடியலுக்காக அனைவரும் ஒன்றுபட்டு அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி அவரது கனவை நனவாக்குவோம் என்று பா.நடேசன் தெரிவித்தார்.
Monday, December 18, 2006
தலைவர் மீதும் போராளிகள் மீதும் அதீத ஈடுபாடு ...
Monday, December 18, 2006





