Saturday, December 02, 2006

இரானுவத்தினரால் தாக்கப்பட்ட ஐவர் மருத்துவமனையில்...

இரானுவத்தினரால் தாக்கப்பட்ட ஐவர் மருத்துவமனையில் அனுமதி. யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் முன்னால் நேற்று இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து இராணுத்தினரால் தாக்கப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் வையித்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்கள். கிளைமோர் வெடித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தற்கு விரைந்த படையினர் அப் பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் வழிப்போக்கர்களையும் தாக்கியதில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த எஸ்.செல்ராசா 28 வயது, எம்.சுதாகரன் 29 வயது, மற்றும் மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களில் மூவர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு தெரிவிக்காது வைத்திய சாலையில் இருந்து வெளியெறியுள்ளதாகவும் இது சம்பந்தமாக வைத்திய சாலை வட்டாரங்கள் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.