Thursday, November 30, 2006

ஹன்சன் பவர் எதிர்வரும் திட்கட்கிழமை கிளிநொச்சி பயணம்.

நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹன்சன் பவர் எதிர்வரும் திட்கட்கிழமை கிளிநொச்சி பயணம். நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஜோன் ஹான்சன்பவர் எதிர்வரும் திங்கட் கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையின் பின்னர் இவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இலங்கை வந்த இவர் கொழும்பிலும் அரசின் முக்கியஸ்த்தர்களைச் சந்திக்க உள்ளார். ஏற்கனவே அரச சமாதானக் குழுத் தலைவர் நிமால் சிறீபாலடீ சில்வாவைச் இன்று சந்தித்துள்ளார். சுகாதார அமைச்சில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாhடலில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது, பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள யாழ்ப்பாண மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைந்து அனுப்புவது, ஏ9 வீதியைத் திறப்பது, வாகரைப்பிரதேச மக்களுக்கான உணவு வழங்கலை மேற்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் தொடர்ச்சியாகப் பரவிவரும் சிக்குன்குன்யா நோய்க்குரிய மருந்துகளை வடக்கு கிழக்குக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ,விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்குக்கூட அரசாங்கம் மருந்து வகைகளை அனுப்பி வருவதாகவும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவருக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா விளக்கியுள்ளதாக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நோர்வே விசேட சமாதானப் பிரதிநிதியின் வருகை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. அவர் இந்த விஜயத்தின் போது அரச மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.