விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் அரச சமாதான செயலக செயலாளர் பாலித நம்பிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என தாம் நம்புவதாக அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலக வில்லைஎன காணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சு மேசைக்கு வருவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம்.பேச்சுக்கள் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையும் அரசாங்கத்தின் நிலையில் எந்த மாற்றமும் இல்லையென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எரிக் சொல்ஹெய்ம் இதே வேளை,அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சமாதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால் இரு தரப்பினருடனும் தொடர்புகளை மேற்கொண்டு சமாதான நடவடிக்கைகளை நோர்வே தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக் பேச்சுவார்த்தைகளின் மத்தியஸ்தருமான எரிக் சோல்ஹெம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையையடுத்து எரிக் சொல்ஹெய்ம் சார்பில் அவரது பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நாம் தொடர்ந்தும், இரு தரப்பிற்கும் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க, உதவத் தயாரகவே உள்ளோம்.
ஆனால் இந்த நிலையில் நோர்வே எந்த விதமான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாது. இரு தரப்பினரும் சமாதான நடவடிக்கைகளை முன்னகர்த்த விரும்பினால் நாம் இரு தரப்பினருடனும் தொடர்புகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளோம். ஹன்ஸன் பௌயர் வருகை இதே வேளை நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்ஸன் பௌயர் இன்று காலை இலங்கை வருவார் என நோர்வே தூதரக பேச்சாளர் கேசரிக்குத் தெரிவித்தார்.
சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் பௌயர் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் புலிகளின் பிரதிநிதிகளுடன் எதிர்கால சமாதான நடவடிககைகள் குறித்துப் பேசவுள்ளார் என தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Thursday, November 30, 2006
விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ...
Thursday, November 30, 2006





