யாழ் குடாநாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கம் டிசம்பர் 14ம் நாள் வரை 702 பொதுமக்கள் பலி!
யாழ் குடாநாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் சிறீலங்காப் படைகளால் 702 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார் என யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை விடுதிருக்கும் மனித உரிமைகள் ஆணையகம் கடந்த ஏப்ரல் மாதம் டிசம்பர் 14ம் நாள்வரை சிறீலங்காப் படைகள் நடத்திய பகிரங்கத் தாக்குதல், உந்துறுளிப் படுகொலைகள், வெள்ளை வான் ஆட்கடத்தல், போன்றவற்றில் 702 பேர் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் - 139 பேர்
மே மாதம் - 15 பேர்
யூன் மாதம் - 150 பேர்
யூலை மாதம் - 73 பேர்
ஓகஸ்ட் மாதம் - 146 பேர்
செப்ரெம்பர் மாதம் - 50 பேர்
ஒக்டோபர் மாதம் - 40 பேர்
நவம்பர் மாதம் - 72 பேர்
டிசம்பர் 14ம் நாள் வரை - 17 பேர்
எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, December 18, 2006
யாழ் குடாநாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கம் டிசம்பர் 14ம்..
Monday, December 18, 2006





