வட - கிழக்கை பிரித்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம் இணைக்கப்பட்ட வட கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு "ஜன பிரணாபிமானி" என்ற பெயரில் விருது வழங்கும் வைபவமொன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. வடகிழக்கை பிரிப்பதற்காக தாக்கல் செய்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி எச்.எல். சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர, சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் சட்டத்தரணி மனோலி ஜினதாச உட்பட வழக்கை தாக்கல் செய்த ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேயசேகர, வசந்த ஜினதாச எம்.பி. மற்றும் ஏ.எஸ்.எம். புஹாரி, ஜீ.எம். பீரிஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.





